வியாழன், 23 டிசம்பர், 2010

பகுத்தறிவு சிற்றூடகப் பேரவை

தமிழ்த் தோழமைகளுக்கு வணக்கம்.

பெரியார் பெருவெளியில் ஒரு துளியாய் இருக்க முயல்பவன் நான், அய்யாவின் இந்நினைவு நாளில் “பகுத்தறிவு சிற்றூடகப் பேரவை”யினை தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

இப்பேரவையின் தொடக்கமாக, “பகுத்தறிவு” என்ற குறுஞ்செய்தி இதழ் தொடங்கப்படுகின்றது. இவ்விதழானது வெள்ளிக்கிழமை தோறும் அய்யாவின் கருத்துக்களை தாங்கி வரும். தொடக்கத்தில் குவைத் வாழ் தமிழர்களிடமும், தொடர்ந்து தமிழகமும் பிறகு உலக அளவிலும் விரிவு செய்யப்படும்.

இவ்விதழினைப் பெற விரும்புபவர்கள் “00965-66852906” என்ற கைபேசிக்கோ “thamizhnadan@gmail.com" என்ற மின்னஞ்சலுக்கோ தமது கைபேசி எண்ணைக் குறிப்பிட்டு செய்தி அனுப்பவும்.

தங்களின் கருத்துக்களையும் விமரிசனக்களையும் எதிர்நோக்கி....

“பகுத்தறிவு சிற்றூடகப் பேரவை”
00965-66852906.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக